மருத்துவக் குணங்கள்: கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும். ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும். 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும். - 

மருத்துவக் குணங்கள்:
  1. வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
  2. (விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது.
  3. யானைக்கால் நோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படும் நிலையில், கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. மருத்துவரின் பரிந்துரைப்படி, வேப்பம்பட்டை கஷாயத்தை தினமும் காலையில் 48 நாள்கள் குடித்து வந்தால், யானைக்கால் நோய் காரணமாக ஏற்படும் கால் வீக்கம் குறையும்.
  4. கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு வேப்ப எண்ணெய் உள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  5. வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
  6. (விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது.
  7. யானைக்கால் நோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படும் நிலையில், கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. மருத்துவரின் பரிந்துரைப்படி, வேப்பம்பட்டை கஷாயத்தை தினமும் காலையில் 48 நாள்கள் குடித்து வந்தால், யானைக்கால் நோய் காரணமாக ஏற்படும் கால் வீக்கம் குறையும்.
  8. கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு வேப்ப எண்ணெய் உள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.


மருத்துவக் குணங்கள்:
  1. தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
  2. இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  3. பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
  4. துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
  5. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

         பிரபாகரன் சங்கடமாக உணர்ந்தான். அறை வாசலை "உள்நோக்கத்துடன்தான்" திறந்து வைத்திருந்தான். ஓர் இணை இயக்குநர் படத்தின் நாயகிக்கு வசனமும், காட்சியின் 
அழுத்தமும் சொல்லிக்கொடுப்பது வழக்கம். என்றாலும், அவுட்டோர் வந்த இடத்தில் இரவு நேரத்தில் தங்கியிருக்கும் லாட்ஜின் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு டயலாக் 
சொல்லிக்கொடுப்பது யூகத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருந்தான். அதனால்தான் கதவை திறந்து வைத்தான். ஆனால் அதற்கு அர்த்தம் இல்லாதது போலிருந்தது 
நாயகி ராகினியின் பார்வை.
அவனைத்தின்று விடுவது போல பார்த்தாள். கண்களில் கள்ளம். கையில் இருந்த பேப்பரை கீழே வைத்துவிட்டு அவளை முறைத்தான் பிரபாகரன். இது கோபப்படும் 
தருணம் அல்ல.
நிதானமாகப் பேசினான்.
"ராகினி நாளைக்கு க்ளைமாக்ஸ். நாலு பக்க டயலாக் பேசணும். அதப்பத்தி நீ அலட்டிக்கிட்ட மாதிரி எனக்குத் தோணல. ஷூட்டிங்ல சொதப்பின டைரக்டர் என்னை 
தொலைச்சிடுவார். ப்ளீஸ் இங்க கவனம் வை" என்றான் கெஞ்சலாக.
படப்பிடிப்புத் தொடங்கிய இந்த ஆறு மாதங்களில் ராகினிக்குத் தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருப்பதையும் அதை அவள் சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம் 
வெளிப்படுத்திக் கொண்டிருப்பதையும் உணர்ந்தே இருந்தான். ஆனால் அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது குறித்து அவன் சிந்தித்ததுகூட இல்லை.
நடிகையைக் காதலித்து கைப்பிடிப்பதற்காக அவன் கும்பகோணத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வரவில்லை. அவனுக்கென்று லட்சியம் இருந்தது. வெறி இருந்தது. 
சாதிக்கும் எண்ணம் இருந்தது. தமிழ் சினிமா குறித்தான ஒரு பார்வையும், திரைப்படம் குறித்தான வித்தியாசமான ஒரு கோணமும் இருந்தது. அதன் காரணமாகத்தான் 
ராகினியின் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் விலகி இருந்தான். இன்னும் இரண்டு நாள் படிப்பிடிப்பு முடியப் போகிறது. அதற்குள் ராகினி அசட்டுத்தனமாக ஏதாவது 
அவனிடம் தன்னை வெளிப்படுத்துவாள் என்பதை எதிர்பார்த்திருந்தான்.
அதற்கான தனிமை சூழ்நிலைதான் இன்றைய தினம் என்பதை உள்ளுணர்வு உணர்த்திற்று.
"எப்ப என்னை புரிஞ்சுக்கப் போறீங்க பிரபாகர்?"
கேட்டே விட்டாள்.
"நான் எதுக்கு உன்னைப் புரிஞ்சுக்கணும்?"
ஏதும் புரியாதவன் போல கேட்டான்.
ராகினி சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவன் வயதை ஏதோ பண்ணிற்று. அற்புதமான சிரிப்பு. ஓர் இணை இயக்குநராக ஒரு படைப்பாளியாக ராகினியை அவனால் 
புறக்கணிக்க முடியாது. அப்படி ஓர் அழகி. அதற்கு இணையாக நடிப்பு. கேரளாவில் இருந்து புகைப்படம் வந்தபோதும் பிற்பாடு இயக்குநரோடு நேரடியாகப் பார்த்தபோதும் 
மனதுக்குள் இருந்த நம்பிக்கையை முதல் நாள் படப்பிடிப்பிலேயே சிதறடித்தாள். முகத்தின் ஒவ்வொரு அங்குலமும் நடிப்பை வெளிப்படுத்திற்று. காலங்காலமாக நடிப்பவள் 
போன்ற உணர்வை அவளின் உடல்மொழி தெரியப்படுத்திற்று.
"என்ன சிரிப்பு?"
"நம்ம உறவு, சினிமா மாதிரியே இருக்கு பிரபா"
"என்ன உறவு?"
"தெரியாத மாதிரி கேட்காதீங்க. புரியலையா? இன்னைக்கு ஒரு முடிவு தெரியணும் பிரபா... இல்லேன்னா நாளைக்கு ஷூட்டிங் வர மாட்டேன்..."
தழுதழுத்த குரலில் பேசினாள்.
வார்த்தை தொண்டைக்குழியில் சிக்கிற்று.
எதிர்பார்த்ததைவிட, அதிகமாக காதல் அவளைப் படுத்துவதை பிரபாகர் உணர்ந்தான். பக்குவமற்ற வயது. தன்னை உணராத நிலை. இந்தப் படத்திற்குப் பிறகு 
அவளுக்கான பிரம்மாண்ட இடத்தை அவளால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் இணை இயக்குநர் மீது காதல். இப்போது இவளைச் சமாளிக்க 
வேண்டும். ஏதும் சர்ச்சை எழுந்திடாத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். இயக்குநரிடம் இருக்கும் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பை 
வெற்றிகரமாக முடிக்க வேண்டும். நல்ல நடிகை. காதல் மாயையிலிருந்து இவளை மீட்க வேண்டும்.
பிரபாகரனின் மனதுக்குள் எண்ணங்கள் ஓடிற்று. சட்டென அந்த ஐடியா வந்தது.
"ராகினி"
"ம்"
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
தலையணையை நகர்த்தி வைத்துவிட்டு அவன் முகம் பார்த்தாள்.
"உன்னோட எண்ணம் எனக்குப் புரியுது. இதுல அவசரப்பட்டு ஏதும் முடிவெடுக்க முடியாது. நிறைய யோசிக்கணும். நமக்குள்ள ஒரு சின்ன அக்ரிமெண்ட்..."
"சொல்லுங்க பிரபா..."
"படப்பிடிப்பு நாளைக்கு முடியுது. ரெண்டு மாசத்துல படம் ரீலிஸ். படம் நிச்சயம் ஹிட். வெற்றி செய்தி காதுக்கு வந்த அடுத்த நிமிடம் நீ என்னைத் தேடி வர்ற. 
இல்லேன்னா நான் உன்னைத்தேடி வர்றேன்...ஓகே...? அதுக்குள்ள நானும் படம் கமிட் ஆயிடுவேன். நாம கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி முடிவு பண்ணலாம். 
அதுவரைக்கும் அமைதியா இருப்போம். அதான் ரெண்டு பேருக்கும் நல்லது. ஓகே?"
அவனையே உற்றுப் பார்த்தவள் இதுவரை இப்படி ஏதும் ஆசை வார்த்தைகளை அவன் உதடு உச்சரிக்காததால், அவன் முற்றிலும் எதிர்பார்க்காத விநாடியில் பச்சென 
கன்னத்தில் முத்தமிட்டாள்.
"இப்ப டயலாக் பார்க்கலாம்" என்றாள் உற்சாகமாக.
பிரபாகர் எதிர்பார்த்தது நடந்தது. படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் இருந்தது. இரண்டாவது படத்திலும் ஹிட் அடித்து இயக்குநர் ஒரு கோடி சம்பளத்திற்கு உயர்ந்தார். 
படப்பிடிப்பு முடிந்து பலமுறை ராகினி அவனை அலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் பேசுவதைத் தவிர்த்தான். படம் வெளியான பிறகு நிச்சயம் தேடி வருவாள் 
என்பதை உணர்ந்திருந்தவன், தங்கியிருந்த அறையை மாற்றினான். அலைபேசி நம்பரை மாற்றினான்.
நான்கு படங்களுக்குக் கையில் அட்வான்ஸூடன் தயாரிப்பாளர்கள் அலைந்தபோதும், ராகினி அதைப் பொருட்படுத்தாமல் பிரபாகரைத் தேடினாள். அவன் தங்கியிருந்த 
அறையைக் கண்டுபிடித்து வந்தபோது அது பூட்டப்பட்டிருப்பதையும், பிரபாகர் அறை மாறி விட்டதயும் அதோடு அலைபேசி நம்பரை மாற்றி விட்டதையும் அறிந்தவள் 
தனிமையில் அழுதாள்.
ஒரு வருடம் நகர்ந்தது.
ஹைதராபாத்.
உதவியாளன் வேகமாக உள்ளே வந்தான். பிரபாகர் அவன் வேகத்தை உணர்ந்து முகத்தைப் பார்த்தான்.
"ஸார்... ராகினி உங்களைத் தேடி வந்திருக்காங்க..."
பிரபாகருக்குச் சிறிது அதிர்ச்சி. ஆனாலும் சமாளித்துக் கொண்டான்.
"வாசல்ல வெயிட் பண்றாங்க... அவங்க உங்களத் தேடி வந்திருக்கிற தகவல் போயி புரொட்யூஸர் ஆபிஸூக்கு வந்துக்கிட்டு இருக்காரு சார்..."
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருத்தி. பூஜை போட்ட அன்றே வியாபாரத்துக்கு உறுதி. அவள் தன்னைத் தேடி ஹைதராபாத்துக்கு...
"வரச்சொல்லு... நீங்கள்லாம் கொஞ்சம் வெளில இருங்க"
உதவியாளர்கள் வெளியேறிய உடன் ராகினி உள்ளே வந்தாள்.
"ஹாய்" என்றான்.
அவனையே உற்றுப் பார்த்தாள்.
"கண்டுபிடிச்சி வந்திட்டேன் பார்த்தியா? இந்தியாவுல நீ எங்கே போனாலும் விடமாட்டேன்".
"ஒ.கே. ஆல் த பெஸ்ட். தமிழ் தெலுங்குன்னு கலக்கிட்டு இருக்கே. இந்திலகூட பண்ணப் போறதா கேள்விப்பட்டேன்".
"ஆனா நிம்மதி இல்ல."
"நீதான் அமைச்சுக்கணும்."
"எனக்கு நீ வேணும்."
"விளையாடாதே. இன்னும் நாலு வருஷத்துக்குக் கைல படம் இருக்கு. ஹிந்தில கூப்பிடறாங்க. இப்பப் போயி காதல் கீதல்ன்னு மனச குழப்பிக்காத"
"எனக்குப் பணம் முக்கியமில்ல. மனசுக்குப் பிடிச்சவரோட வாழணும்"
"ஒரு வருஷமாச்சு. நீ இன்னும் மனசை மாத்திக்கலையா?"
"எத்தினி வருஷமானாலும் மாத்திக்க மாட்டேன். நைசா பேசி என்னை ஏமாத்திட்டதா நினைப்பா? பைத்தியமா உனக்கு? சென்னையில் இருந்து ஹைதராபாத் வந்து 
தெலுங்குப் படம் பண்ணப் போற. சொல்லு யாரு வேணும் உனக்கு? எந்த ஹீரோ வேணும் உனக்கு? எந்தப் புரொட்யூஸர்கிட்ட பேசணும்? அடுத்த வெள்ளிக்கிழமை பூஜை. 
நான் ஏற்பாடு பண்றேன்.
படபடத்தாள்.
பிரபாகரன் சிரித்தான்.
"நான் வெளிப்படையா உண்மைய சொல்லிடறேன் ராகினி. மனசுக்குள்ள ஆசையையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கி வச்சிருக்கு... இனியும் மறைச்சா நல்லா இருக்காது. 
எனக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டு. முறைப்பொண்ணு. அடுத்த மாசம் ஆறாம் தேதி சிம்பிளா கும்பகோணத்துல கல்யாணம். நாளைக்குப் பத்திரிகை அடிச்சு வருது. முதல் 
பத்திரிகை உனக்குதான்."
ராகினியின் முகம் பேயறைந்தது போலாகியது.
கண்களில் கண்ணீர் பொங்கிற்று. பிரபாகருக்குப் பாவமாக இருந்தது.
கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
சில விநாடிகளில் வாசலில் இருந்து கார் வேகமாகப் புறப்படும் சத்தம் கேட்டது.
உள்ளே வந்த இணை இயக்குநர் மூர்த்தி, "சார் நான் ஓரளவு கேள்விப்பட்டு இருக்கேன். உங்களுக்குப் படம் கிடைச்சிட்டு. அவங்களும் நம்பர் ஒன் ஆர்டிஸ்ட். எனக்கு 
தெரிஞ்சு உங்களுக்கு அஃபையர் ஏதும் கிடையாது. அப்புறமென்ன? ராகினிய கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே? நடிகைங்கற தயக்கமா?"
இணை இயக்குநர் என்றாலும் பிரபாகர் நட்பு ரீதியாக அவனுடன் எண்ணவோட்டங்களைப் பகிர்ந்து கொள்வான். அந்த உரிமையில் பேசுகிறான்.
பிரபாகர் மூர்த்தியைப் பார்த்து சிரித்தான்.
"பதினஞ்சு வருஷமாச்சு மூர்த்தி. அஸிஸ்டெண்ட் டைரக்டரா ஆவறதுக்காக நான் அலைஞ்சது மறக்காது மூர்த்தி. மழை நேரத்துல வாய்ப்பு கேட்கப் போயி புயல்ல 
மாட்டிக்கிட்டு வடபழனில ஒரு கடை வாசல்ல ஒன்றரை நாள் நின்னேன். அஸிஸ்டென்ட் டைரக்டரா பத்து வருஷத்துல எட்டுப் படம் முடிச்சிருக்கேன். முறையா 
வளர்ந்திருக்கேன். எங்கேயும் குறுக்கு வழி இல்ல.
எங்க டைரக்டரை விட்டு வெளிய வந்த இந்த ஒரு வருஷத்துல நான் கதை சொல்லாத தயாரிப்பாளர் கிடையாது. நடிகர் கிடையாது. இந்தக் கதைக்கு தெலுங்குலதான் 
மரியாதை கிடைச்சிருக்கு. என் உழைப்புக்கான, அலைச்சலுக்கான, முயற்சிக்கான அங்கீகாரம் எனக்கு வேணும் மூர்த்தி..."
அழுத்தமாகப் பேசிய பிரபாகரைக் குழப்பமாகப் பார்த்தான் மூர்த்தி.
"ராகினி மேல எனக்கு சாஃப்ட் கார்னர் இருக்கு. இல்ல... அது வேற. ஆனா இன்னைக்கு நான் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா என் உழைப்பு அடிபட்டுப் போயிடும். 
ஒரு நடிகையோட புருஷனா ரொம்ப சாதாரணமானவனா ஆயிடுவேன். என்னோட தனித்தன்மையை இழந்திடுவேன். இந்த வாய்ப்பு அவ வாங்கிக் கொடுத்ததுன்னு 
பேசிடுவாங்க. பத்து வருஷ முயற்சி அந்த ஒரு வார்த்தைல அடிபட்டுப் போயிடும் மூர்த்தி. நாளைக்கு இந்தப் படம் ஹிட் ஆகி நான் மீடியா முன்னால நிக்கிறப்ப என் 
உழைப்புக்கான உண்மையும் நேர்மையும் அவங்க முன்னாடி வெளிப்படணும்... ஒரு வெற்றி இயக்குநரா என்னை முன்னிலைப் படுத்திக்கணும். குற்ற உணர்ச்சியோட 
நிக்கக்கூடாது."
மூர்த்தி வியப்பாக அவனைப் பார்த்தான்.
"எல்லாமே ஒரு நேர்க்கோடுலதான் வருது மூர்த்தி. ராகினி அறிமுகம். அவளோட வெற்றி. என் மீதான அபிமானம்... இப்ப அவ என்னைத் தேடி வந்தது... எல்லாம்... இப்ப 
இந்தப் படம் ஹிட் ஆகி, ஒரு வெற்றி இயக்குநரா எனக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். என்னை நான் நிரூபிக்கலாம். அப்ப நான் ராகினிய தேடிக்கூட போகலாம். நாங்க 
கல்யாணம்கூட பண்ணிக்கலாம். ஆனா அதுக்கான சந்தர்ப்பம் இப்ப இல்ல. எந்த சூழ்நிலையிலும் என்னோட உழைப்ப, முயற்சிய நான் விட்டுக்கொடுக்கறதா இல்ல மூர்த்தி" 
என்றபடி சிரித்தான்.
நல்ல கிரியேட்டர், இயக்குநர் என்றெல்லாம் பிரபாகரைப் பற்றி இமேஜ் வைத்திருந்த மூர்த்திக்குப் பிரபாகரனின் நேர்மை ரொம்பவே பிடித்திருந்தது.
"ஆல் த பெஸ்ட் சார்" என்றான் சிரிப்புடன், சிலிர்ப்புடன்.
நன்றி: தினமணி கதிர்
        சௌதாமினி வீதி முக்கைக் கடக்கும்போது "கனவு இல்லம்" என்ற போர்டு இருந்த வீட்டைப் பார்த்தாள். கேட் பூட்டியிருந்தது. முகம் இருளடைந்ததுபோல் இறுக்கமாகியது. அரை பர்லாங் தூரம் போனால் புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். அந்தக் கட்டடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அவள் பயணம் நீண்ட பயணம்தான்.
பீகாரிலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கோ, டெல்லிக்கோ போவதுகூட நீண்ட பயணம் என்று நினைக்கிறவள் அவள். ஆனால் சௌதாமினியைத் தமிழ்நாடு வரைக்கும் யார் துரத்தியது? ரொம்ப தூரம்தான் வந்துவிட்டாள்.
"கனவு இல்லத்தை" மறுபடியும் பார்த்தாள். கதவு திறந்திருந்ததென்றால் உள்ளே நுழைந்து, "கொஞ்சம் தண்ணீ" என்று கொஞ்சும் தமிழில் கேட்பாள். "கொஞ்சம் தண்ணீ" என்று பேசுவதற்குக் கற்றுக் கொண்டதுதான் முப்பதுநாளில் அவள் கற்றுக் கொண்ட தமிழாகும். கனவு இல்லத்தில் சுகந்தி இருந்தால் தண்ணீர் கொடுப்பாள். காலை பதினொரு மணிக்கோ மாலை மூன்று மணிக்கோ இதே போல வந்து நின்றால், தேநீர் கிடைக்கும். ஆனால் கட்டடத்தில் வேலை செய்பவர்களுக்குக் காலையும் மாலையும் தேனீர் வாங்கி வர ஒருவன் இருந்தான். தேனீர் கடையில் சௌதாமினிக்குப் பிடித்த ஆலு போண்டா வெகு அபூர்வமாகத்தான் கிடைக்கும். ஆலு போண்டாவை ஜிஜேந்திரனும் விரும்பிச் சாப்பிடுவான். ஜிஜேந்திரன் அவளின் அன்பு கணவன் பீகார்காரன்தான். திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் வேலை கொட்டிக் கிடக்கிறதென்று ஏகப்பட்ட பேரை திருமூர்த்தி என்ற புரோக்கர் கூட்டிக் கொண்டு வந்தான். புரோக்கர்களுக்கு ஓர் ஆளைக் கூட்டிக் கொண்டு வந்தால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்த ஆள் தொழிற்சாலையில் ஓராண்டிற்கு மேல் இருந்தால் இன்னொரு ஐநூறு ரூபாய் கிடைக்கும். அப்படித்தான் பீகாரின் புழுதி படர்ந்த குக்கிராமத்திலிருந்து சௌதாமினி, ஜிஜேந்திரன் உட்பட ஐம்பது பேரைக் கூட்டி வந்திருந்தான். திருமூர்த்திக்கு ஒரே ரயில் பயணத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கிட்டியிருக்கும். தலைக்கு ஐநூறு ரூபாய் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது அவனுக்கு. பின்னலாடைத் தொழிற்சாலையில் அவன் கூட்டி வந்ததில் பதினைந்து பேர், "வேலை கடினம்" என்று சொல்லிவிட்டார்கள். மிருதுவான பனியன் துணிகளைப் பக்குவமாய் கையாள வேண்டியிருந்தது. இளம் பெண்ணின் உடம்பைத் தொட்டுப் பார்ப்பது போன்ற மிருதுத்தனம் எவ்வளவு நுணுக்கமானது. புழுதி பறக்கும் கிராமத்தில் இருந்து ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சிரமம்தான். பேக்கிங், செக்கிங்கூட பிடிபடவில்லை. திருமூர்த்தி பதினைந்து பேரை வெளியேற்றிவிட்டான். "சப்பை மூக்கு மஞ்சள் தோலு நேபாளிங்ககூட எவ்வளவு பேர் உங்க கண்ணு முன்னாலே பனியன் கம்பனியில வேலை செய்யறாங்க. உங்களுக்கென்ன கேடு? மூணு வேளை சாப்பாடு, தங்க எடம். கல்யாணமாகாதவங்கன்னா முப்பதாயிரமோ, ஐம்பதாயிரமோ தருவாங்க. கூடவே அரைப் பவுன் தாலியும்"
"சுமங்கலி ஸ்கீம்"
"ஆமாமா... சுமங்கலிகளா கூட்டிட்டு வந்திருக்கலாம் போலிருக்கு. பனியன் கம்பனியில வேலை செய்யறது எவ்வளவு சொகுசு"
"ஆனா எங்களுக்குப் பிடிபடலியே... என்ன பண்றது?"
ஷாஜஹான் மேஸ்திரியிடம் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தினான்.
"கம்பெனி வேலைக்குன்னு கூட்டிட்டு வந்தது. பிரயோஜனமில்லை. கட்டட வேலைக்காவானுக. பீகாருக்குத் திரும்பிப் போய் ரொட்டி சுட்டுத் திங்க ஆசையில்லங்கறானுங்க. இட்லி சாம்பார்ல மூழ்கிப் போயிட்டானுக. கட்டட வேலைக்கு எடுத்துக்கோ" ஷாஜஹான் திருமூர்த்திக்குப் புரோக்கர் கமிஷனாக ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தான்.
இப்போதைக்கு நகரத்தைத் தாண்டி ஒதுக்குப் புறமான இடத்தில் பனியன் கம்பெனி கட்டட வேலை நடக்கிறது. அது முடிய நாலைந்து மாதங்களாகும். பிறகு வேறு கட்டிடம் முளைக்கும். புதிய மாவட்டமாகிவிட்டது. கார்ப்பரேஷன் எல்லை விரிவாகிக் கொண்டிருந்தது. சண்டை போட மொழி தேவையில்லாதபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பது போல பீகாரில் தங்கள் மொழியில் ஏதாவது பேசிக் கொண்டு வேலை செய்து வந்தனர். இட்லியும் தோசையும் சாம்பாரும் அவர்கள் வாயை அடைத்திருந்தது.
கட்டட சாரத்தின் மேல் நின்று ஜிதேந்திரன் தூரப் பார்வை பார்த்தான். தாறுமாறாய் புல்லும் முள்ளும் அடர்ந்து கிடந்தது. பாதையென்று அழுத்தமான தடமாய் எதுவுமில்லை. கட்டட வேலைக்கென்று வந்து போகிற பீகாரிகளும், ஷாஜஹான் மற்றும் வாகனங்களும் ஏற்படுத்தியிருந்த தடம் தான் மெல்லியதாகத் தெரிந்தது. மனைவி சௌதாமினி கண்ணில் தென்படவில்லை. வெயில் வேறு கசகசவென்று வியர்வையைப் பெருக்கெடுக்க வைத்தது. சௌதாமினி ஏதாவது வீட்டு நிழலில் வெயிலுக்குப் பயந்து நின்றிருப்பாள். பீகார் வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் பயப்படாதவள்தான் சௌதாமினி. தமிழ்நாட்டின் உச்சிவெயிலில் வானத்தையும் சூரியனையும் பார்ப்பவள் அவள்.
ஜிஜேந்திரன் சாரத்தைவிட்டுக் கீழிறங்கினான். சற்று தூரத்தில் ஒரு கார் வந்து நின்றிருந்தது. காரிலிருந்து இறங்கிய மூன்று பேர் சாய்ந்து கொண்டு மேற்கு பக்கம் பார்த்தார்கள். சூரியனின் வெம்மையைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் போன்று முகங்களைச் சுருக்கிக் கொண்டார்கள். ஜிஜேந்திரன் அவர்கள் அருகில் சென்று, "தண்ணீ வேணும்" என்றான். கார் உள் அவன் பார்வை அலைந்தது. அவனின் அழுக்கு குர்தாவும் கொஞ்சம் தமிழும் அவனை ஆர்வமாய்ப் பார்க்கச் செய்தது.
"தண்ணியில்ல"
"தாகம்"
"தண்ணியெதுவும் இல்லெ" ஜிஜேந்திரனின் கண்கள் காரினுள் அலைபாய்ந்தன.
"கொஞ்சம் குடிக்க"
"கார் சூடாயிருச்சு. காருக்கு ஊத்தத்தான் தண்ணியிருக்கு" ஜிஜேந்திரன் மீண்டும் வார்த்தைகளாய் சொல்லாமல் கை விரல்களை வாய் அருகே கொண்டு சென்று சைகை செய்தான்.
"காருக்குத்தான் இருக்கு".
அவன் பீகாரிலிருந்து புறப்படுவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தான். திருமூர்த்தி வேறு அவ்வப்போது தலையைக் காட்டி, "ஐம்பது பேர் சேர்ந்தாச்சு. நீ ஐம்பத்தி ஒண்ணாவதா சேர்ந்துச்சு, தமிழ்நாட்ல வேலை கொட்டி கெடக்கு. எதுக்கு ஆடு மேய்க்கறே" என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆடுகளை ரொம்ப தூரம் ஓட்டி வந்துவிட்டான் என்று தெரிந்தது. கும்பலாய் நிறையப் பேர் தென்பட்டதும் அருகில் சென்றான். கார்கள் ஏழெட்டு நின்றிருந்தன. அவற்றின் வர்ணங்களில் மயங்கியவன் போல் நின்றான். இன்னும் தூரத்தில் காமிராவில் ஏதோ படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். சுவாரஸ்யம் இல்லாத மாதிரி கார்களைப் பார்த்தான். தண்ணீர் கேட்டான். இல்லையென்றார்கள். தாகத்தால் திரும்பத் திரும்ப நாக்கு வறண்டு தண்ணீர் கிடைக்கவில்லை. அன்றைக்கு மாலை திருமூர்த்தியைப் பார்த்தபோது தலையாட்டிவிட்டான். "இன்னிக்கு ராத்திரி ஐம்பத்தொம்பது பேர் திருப்பூர் போறம்"
மீண்டும் நடந்து வந்து சாரத்தின் மேல் ஏறினான்.
வடக்குப் பக்கத்திலிருந்து கற்களை வேறு இடத்துக்கு மாற்றுகிற வேலையை மற்றவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். சாரத்தின் மேற்குப் பக்கம் நடந்து சென்ற ஜிஜேந்திரன் வானம் பார்த்தான். வெயில் கருக்கியது. எச்சிலை விழுங்கி பின் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டான்.
மேற்குப் பக்கம் இன்னும் முழுமையாக முடியாத இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இருந்தது. அதிலிருந்த பிளாஸ்டிக் கயிற்றில் துவைத்த துணிகளைக் காயப் போட்டிருந்தார்கள். வலது கையை நீட்டியபோது மஞ்சள் நிறப் பாவாடையொன்று கையில் பட்டது. மிருதுவாக இருந்தது. பயன்படுத்துபவள் இளம்பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். இழுத்த போது மெல்லிதான பரபரச் சத்தத்துடன் கைக்குள் வந்துவிட்டது. சாரத்தை விட்டுக் கீழே இறங்கினான்.
பக்கத்துக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக்குச் சென்றான். முதல் தளத்திலோ, கீழ் தளத்திலோ யாருமே தென்படவில்லை. அவனின் காலடிச் சத்தத்தைக் கேட்டு வந்த மாதிரி அந்தப் பெண் கதவருகில் வந்து நின்றாள். அவன் கையில் இருந்த மஞ்சள் பாவாடையை நீட்டினான். அவள் அதிர்ச்சியடைந்ததுபோல திடுக்கிட்டுப் பார்த்தாள். அவளுடைய அழகான முகத்தில் கண்கள் கோலிக் குண்டுகளாய் உருண்டன. வெகு சமீபமாய்த்தான் புருவங்களைச் செதுக்கியிருந்ததால் முகம் பளிச்சென்று இருந்தது.
"என்னுடையதுதா"
"கீழே வேலை செஞ்சுட்டிருந்தன். கீழே கிடந்தது. அதுதா எடுத்துட்டு வந்தன். உங்களதுதானா?" பீகாரியில்தான் அவன் சரசரவென்று சொல்லிவிட்டு அவளின் பளிச்சென்ற முகத்தைப் பார்த்தான்.
"என்னுடையதுதான்" அவள் பிடுங்கிக் கொண்டவள் போல விரைசலாய் வாங்கிக் கொண்டாள். பனியன் பிசிறு வெட்டிக் கொண்டிருந்தவள் போலும், பஞ்சுத் துகள்கள் முகத்தில் பரவியிருந்தன.
"தண்ணீ வேணும்"
உள்ளே சென்றாள். திரும்பி வந்து பிளாஸ்டிக் பாட்டிலை நீட்டினாள். இரண்டு மடக்கு உள்ளே சென்றதும், உயிர் வந்ததைப் போல இருந்தது.
கைகளை உயரே தூக்கி அவளைக் கும்பிட்டான்.
நன்றி: தினமணி கதிர்
அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் வழக்கமாக இல்லாமல் நிரம்ப குடித்திருந்தான்.
இரண்டு கண்களும் சிவந்து, உடம்பு முழுக்க வியர்வை வழிய, வாயின் இரண்டு ஓரங்களிலும் வாந்தி எடுத்த தடத்துடன், கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தான். வாயிலிருந்து வெளிப்பட்ட குப்பென்ற மதுவாடை மதுவை விரும்பி குடித்த அவனுக்கே பிடிக்கவில்லை தான் போலும்... அந்த வாடை அவனுக்கு கொஞ்சம் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது.
வீட்டு கதவை தொட்டு தடவி வலது பக்கத்தில் இருந்த காலிங்பெல்லை வேகமாக அழுத்தினான்.
வீட்டுக்குள் விளக்கு எரிந்தது. கதவை திறந்து கொண்டு அவனுடைய வயதான அம்மா நின்று கொண்டிருந்தாள்.
"ஏம்பா...இவ்ளோ லேட்டு..?" என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடியே மகனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்.
கடிகாரம் மணி நள்ளிரவு பனிரெண்டரை என்று காட்டியது.
இல்லமா...கொஞ்சம் வேலை அதிகம் என்று அவன் சொல்லி சமாளித்தாலும் அவன் கூடவே சேர்ந்து வரும் மதுவின் வாடை அவன் தாமதமாக வந்த காரணத்தை அவளுக்கு உணர்த்தியது. அவள் எதையும் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை.
அவன் கைப்பையை வாங்கி ஒரு மூலையில் வைத்து விட்டு அவனை கிணற்றடிக்கு அழைத்து சென்று அவன் ஆடைகளை களைந்து விட்டு, அவன் உடல் முழுவதுமாய் நனையும் படி தண்ணீரை வாரி இரைத்து ஊற்றினாள். நடு இரவு என்பதால் நீர் வழக்கத்தை விட அதிகமாக குளிரும் தான். ஆனால் அவன் இருக்கும் மனநிலையில் அதை அவனால் உணர முடியவில்லை.
மகனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று நாற்காலியில் உட்கார வைத்து ஈரம் படிந்த அவன் தலையை நன்றாக துடைத்தெடுத்து அதிகபட்ச வேகத்தில் மின்விசிறியை ஓட விட்டு அவனுக்கு வேறு உடை மாற்றி விட்டாள்.
அவன் சாப்பிடுவதற்கு சாப்பாடு எடுத்து வந்து அவனை சாப்பிடச் செய்தாள். கூடவே எப்போதும் இரவில் மகனுடன் சேர்ந்து சாப்பிடும் அவள் அவனுடன் சேர்ந்து சாபிட்டாள்.
பின்பு மகனை ஒரு கட்டிலில் படுக்க வைத்து, உடம்பை முழுவதுமாக மூடும்படி உள்ள ஒரு போர்வையை அவன் மேல் போர்த்தி விட்டு அந்த கட்டிலின் பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த தனக்கான பாயில் படுத்துக்கொண்டாள்.
காலை விடிந்தது...
அம்மா வாசலில் மாட்டுசாணம் தெளிப்பது, கோலம் போடுவது, குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பது, காலை சிற்றுண்டி தயாரிப்பது என்று அவளுடைய வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தாள்..
இவன் பல் துலக்குவது, காபி குடிப்பது, பேப்பர் படிப்பது, சிறுது தூரம் நடைபயிற்சி பழகுவது என்று வழக்கமான தனது வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
இவற்றையெல்லாம் முடித்து விட்டு குளித்து வேலைக்கு கிளம்ப தயாராகும் தன் மகனுக்கு உணவை ஒரு கிண்ணத்தில் அடைத்து தயாராக வைத்திருந்த அம்மாவிடம் அதை வாங்கிக்கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தை உதைத்து கிளம்பும் போது "அம்மா நான் போயிட்டு வர்றேன்" என்று அவன் விடைபெற, அதற்கு அம்மா "சரிப்பா பத்திரமா போயிட்டு வா...ஆனா நேத்து நைட்டு வந்த மாதிரி வராதப்பா...அத அம்மாவால தாங்கிக்க முடியாதுப்பா" என்று சொன்னாள்.
"நாகரீகம்" என்று வார்த்தையைகூட எழுத தெரியாத அம்மாவின் அந்த ஒரு வார்த்தை அவனுக்கு "சுரீர்" என்றிருந்தது.
Tamilnadu Classifieds - Koodal Business Link
ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி
நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:


இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..

3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.

இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்

அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.

நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்

நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா ?? அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்..

** (ஆனால் இந்த நிகழ்வை நாசா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை, எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை)
"
பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.


6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

பிரசவம் - மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள். . .

பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.

மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்
வேம்பு.!

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.
எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேறுபெயர்கள்
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.

மருத்துவப் பண்புகள்
இலை
1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

காய் + பழம்
தோல் நோய் தீரும்.

விதை
1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

நெய்
1)துஷ்ட புண்கள் தீரும்.
2)ஆராத இரணங்கள் தீரும்.

வேப்பம் பட்டை
1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
2)கஷாயம் குட்டம் தீரும்.

அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
பிசின்
1)மேக நோயைப் போக்கும்.

குறிப்புகள்
பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்

வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?
இதோ பட்டியல்

பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.

சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி,Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.

காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.

நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்

பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்

பாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம் பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்

சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.

குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.

ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.

நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.

தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்

"கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.

இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.

சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.

தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்

கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும்
.
ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.

முட்டை யில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.

மாத்திரைகள் மருந்து பொருட்களில் போலி மருந்துகள் நிறைய புழக்கத்தில் உள்ளது நீங்கள் வாங்கும் மருத்தினை http://verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா ,காலாவதியானதா என சோதிக்கலாம்
விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.
ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன.

பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய்

காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய்

மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய்

ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய்

நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய்

உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய்

பூக்கள் முதலியன - 1.25 இலட்சம்.
தங்கமே தங்கம்…தங்கம் வாங்க போறீங்களா..?!


நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்”


நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர்சொன்னது இதுதான்.


வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையா ளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!


வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இத னை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரிய த்தைச் சாதித்துக் கொண்டாராம்!


நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப் பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவ ரது நியாயமான கேள்வி”
அவரது குமுறல் மிக நீதியானதே என்பது தான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிர ம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.


இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.


ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிரா முக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இது வரை கேள்வி கேட்டதி ல்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.


போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை’ கூல்’ பண்ணு வார்கள். இப்பொழுதெ ல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லா யிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…


சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தா ல் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடை ய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக் குள்ள உண்மை விலை யை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம் தான்.


16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக் கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?


அவர்களிடம் வழி ப்பறி செய்வதைவிட மோச மான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டா ன்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக் காரனாக கொழுக்க முடிகிறது.


இது போன்ற பகற் கொள்ளைக்கார ர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படவேண்டும்.


விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…!
தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது. செல்போன் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம்.எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

    1 ஆண்டு - காகித விழா
    2 ஆண்டு - பருத்தி விழா
    3 ஆண்டு - தோல் விழா
    4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
    5 ஆண்டு - மர விழா
    6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
    7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
    8 ஆண்டு - வெண்கல விழா
    9 ஆண்டு - மண் கலச விழா
    10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
    11 ஆண்டு - எஃகு விழா
    12 ஆண்டு - லினன் விழா
    13 ஆண்டு - பின்னல் விழா
    14 ஆண்டு - தந்த விழா
    15 ஆண்டு - படிக விழா
    20 ஆண்டு - பீங்கான் விழா
    25 ஆண்டு - வெள்ளி விழா
    30 ஆண்டு - முத்து விழா
    40 ஆண்டு - மாணிக்க விழா
    50 ஆண்டு - பொன் விழா
    60 ஆண்டு - வைர விழா
    75 ஆண்டு - பவள விழா
    100 ஆண்டு - நூற்றாண்டு விழா

தஞ்சைப் பெரிய கோயிலும் அரிய தகவலும்-2 (நந்தி)

பெரிய கோயிலில் பக்தர்கள் இப்போது தரிசிக்கும் மகாநந்தி, இராசராசன் காலத்தியது அல்ல. அந்த நந்தி இப்போது தென்மாளிகைச் சுற்றில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் நந்தியை கி.பி. 1550 களில் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரும், அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து எழுப்பியுள்ளனர்.

பதினாறு கால் மண்டபத்தில் மாபெரும் உருவமாக அமைந்துள்ளது இந்த நந்தி. துல்லியமாக பத்தொன்பதரை அடி நீளமும், எட்டே கால் அடி அகலமும், பன்னிரெண்டடி உயரமும் உடைய மகாநந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு

சூரிய ஒளியில் ஓடும் காரை நெதர்லாந்து மாணவர்கள் தயாரித்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கார்கள் இயங்கி வருகின்றன. தற்போது சூரிய ஒளி சக்தியின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஸ்டெல்லா என்று பெயரிடப்பட்டுள்ள பேட்டரிகள் உள்ளன. காரில் மேல் பகுதியில் சூரிய சக்தியை பெறும் பேனல்கள் (தகடுகள்) பொருத்தப்பட்டுள்ளன.

அதன் மூலம் பெறப்படும் சூரிய ஒளி சக்தி ஸ்டெல்லா பேட்டரியில் சேகரிக்கப்பட்டு மின்சாரமாக மாறுகிறது. அதை தொடர்ந்து கார் இயங்குகிறது. இந்த காரில் ஒரு குடும்பத்தை சேர்நத 4 பேர் வரை பயணம் செய்ய முடியும். இக்கார் சுமார் 600 கி.மீட்டர் தூலம் வரை ஓடக் கூடியது.

சூரிய ஒளி சக்தியில் இயங்கும் இக்காரை நெதர்லாந்தில் உள்ள இந்தோவின் தொழில் நுட்ப பல்கலைக் கழக மாணவர்கள் தயாரித்துள்ளனர். வெவ்வேறு 6 துறைகளை சேர்ந்த 22 மாணவர்கள் சேர்ந்து இதை உருவாக்கியுள்ளனர். இதற்காக 1 வருடம் செலவழித்துள்ளனர்.
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.