Health - Very Very Important Tips
Answer the phone by LEFT ear.
Do not drink coffee TWICE a day.
Do not take pills with COOL water.
Do not have HUGE meals after 5pm.
Reduce the amount of OILY food you consume.
Drink more WATER in the morning, less at night..
Keep your distance from hand phone CHARGERS.
Do not use headphones/earphone for LONG period of time.
Best sleeping time is from 10pm at night to 6am in the morning.
Do not lie down immediately after taking MEDICINE before sleeping.
When battery is down to the LAST grid/bar, do not answer the phone as the radiation is 1000 times.



Prevention is better than cure.
HEALTHY JUICES


Carrot + Ginger + Apple - Boost and cleanse our system. 


Apple + Cucumber + Celery - Prevent cancer, reduce cholesterol, and eliminate stomach upset and headache. 


Tomato + Carrot + Apple - Improve skin complexion and eliminate bad breath. 


Bitter gou rd + Apple + Milk - Avoid bad breath and reduce internal body heat. 


Orange + Ginger + Cucumber - Improve Skin texture and moisture and reduce body heat. 


Pineapple + Apple + Watermelon - To dispel excess salts, nourishes the bladder and kidney. 


Apple + Cucumber + Kiwi - To improve skin complexion. 


Pear & Banana - regulates sugar content. 


Carrot + Apple + Pear + Mango - Clear body heat, counteracts toxicity, decreased blood pressure and fight oxidization . 


Honeydew + Grape + Watermelon + Milk - Rich in vitamin C + Vitamin B2 that increase cell activity and str engthen body immunity 


Papaya + Pineapple + Milk - Rich in vitamin C, E, Iron. Improve skin complexion and metabolism. 


Banana + Pineapple + Milk - Rich in vitamin with nutritious and prevent constipation


Quite interesting!


Keep Walking.....


Just to check this out......
The Organs of your body have their sensory touches at the bottom of your foot, if you massage these points you will find relief from aches and pains as you can see the heart is on the left foot.

Typically they are shown as points and arrows to show which organ it connects to.


It is indeed correct since the nerves connected to these organs terminate here..


This is covered in great details in Acupressure studies or textbooks.


God created our body so well that he thought of even this. He made us walk so that we will always be pressing these pressure points and thus keeping these organs activated at all times.


So, keep walking.... 



Did You Know?
Blood type and Rh
How many people have it?

O +
40 %


O -
7 %


A +
34 %


A -
6 %


B +
8 %


B -
1 %


AB +
3 %


AB -
1%

Does Your Blood Type Reveal Your Personality?


According to a Japanese institute that does research on blood types, there are certain personality traits that seem to match up with certain blood types. How do you rate?

TYPE O
You want to be a leader, and when you see something you want, you keep striving until you achieve your goal. You are a trend-setter, loyal, passionate, and self-confident. Your weaknesses include vanity and jealously and a tendency to be too competitive.


TYPE A
You like harmony, peace and organization. You work well with others, and are sensitive, patient and affectionate. Among your weaknesses are stubbornness and an inability to relax.


TYPE B
You're a rugged individualist, who's str aightforwa rd and likes to do things your own way. Creative and flexible, you adapt easily to any situation. But your insistence on being independent can sometimes go too far and become a weakness.

TYPE AB
Cool and controlled, you're generally well liked and always put people at ease. You're a natural entertainer who's tactful and fair. But you're

Quite interesting!
Keep Walking.....


Just to check this out......
The Organs of your body have their sensory touches at the bottom of your foot, if you massage these points you will find relief from aches and pains as you can see the heart is on the left foot. 

Typically they are shown as points and arrows to show which organ it connects to.

It is indeed correct since the nerves connected to these organs terminate here.

This is covered in great details in Acupressure studies or textbooks.

God created our body so well... He made us walk so that we will always be pressing these pressure points and thus keeping these organs activated at all times.
So, keep walking..
.


Did You Know?

DRINK WATER ON EMPTY STOMACH

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven a its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese med ical society as a 100% cure for the following diseases:

Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, ga str itis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and men str ual diso rd ers, ear nose and throat diseases.

METHOD OF TREATMENT
1.. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water .....interesting

2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minutes

3. After 45 minutes you may eat and drink as normal.

4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours

5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:

1. High Blood Pressure - 30 days

2. Gastric - 10 days

3. Diabetes - 30 days

4. Constipation - 10 days

5. Cancer - 180 days

6. TB - 90 days

7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwa rd s - daily.

This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times.

It is better if we continue this and make this procedure as a routine work in our life.

Drink Water and Stay healthy and Active...

This makes sense .. The Chinese and Japanese drink hot tea with their meals ...not cold water. Maybe it is time we adopt their drinking habit while eating!!! Nothing to lose, everything to gain...

For those who like to drink cold water, this article is applicable to you.

It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed . It will slow down the digestion.
Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer.. It is best to drink hot soup or warm water after a meal.

A serious note about heart attacks: Women should know that not every heart attack symptom is going to be the left arm hurting.
Be aware of intense pain in the jaw line.

You may never have the first chest pain during the course of a heart attack..

Nausea and intense sweating are also common symptoms.

60% of people who have a heart attack while they are asleep do not wake up.

Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive...

                                        பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுகளில் கூட, ருசி இல்லையயன்றால் அதனை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.

                      ஏனெனில் உணவை சுவையாக உட்கொண்டே நாம் பழகி விடுகிறோம். பிறந்த குழந்தை கூட தாய்ப்பாலின் ருசிக்கு மயங்கி பல மாதங்கள் வரை வேறு எந்த சுவையையும் விரும்பாமல் தாய்ப்பாலை மட்டும் உட்கொண்டு வருவதுண்டு. நாம் உண்ணும் உணவின் ருசியை மூளைதான் நமக்கு உணர்த்துகிறது என்றாலும், உணவின் தன்மையை நாக்கின் சுவை அரும்புகளே புரிந்துக் கொண்டு உணவின் ருசியை மூளைக்கு கொண்டுச் செல்கின்றன. நாக்கின் சுவை அரும்புகள் பழுதுபட்டால் உணவின் சுவையை உணர முடியாமல் சுவை நரம்புகள் தத்தளிக்கின்றன. இதனால் ருசியான உணவாக இருந்தாலும் கூட உணவை உட்கொள்ள பிடிக்காமல், உணவின்  மேல் வெறுப்பு உண்டாகிறது.

சுவை நரம்புகள் பல காரணங்களால் தனது சுவை உணரும் தன்மையை இழக்கின்றன. சுரம், காமாலை, வயிற்று கிருமிகள், இரத்தச்சோகை, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய் நிலைகளில் நாவின் சுவை நரம்புகள் தற்காலிகமாக தங்கள் பணியை நிறுத்திக்கொள்வதால் உணவின் சுவை தெரிவதில்லை. ஆனால் நோய் சரியானதும் மீண்டும் சுவை நரம்புகள் சீராக பணிபுரிகின்றன. பக்கவாதம், முகவாதம், உமிழ்நீர் கோளவீக்கம், புற்றுநோய் போன்றவற்றில் நிரந்தரமாகவே நாவின் சுவை அரும்புகள் செயலிழந்து விடுகின்றன. நாவில் ஏற்படும் புண்களும், வயிற்றின் கூடுதல் அமிலச் சுரப்பும், நாவில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை கிருமிகளும் கூட நாவின் சுவையை மாற்றிவிடுகின்றன.

                                           உண்ணும் உணவின் சுவை தெரியாமலும், உணவின் மேல் விருப்பம் இல்லாமலும், பசியின்மையாலும் தோன்றும் ருசியின்மையை சித்த மருத்துவம் அரோசகம் என குறிப்பிடுகிறது. தூங்கிக்கொண்டிருக்கும் நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பி, கபால நரம்புகளை தூண்டி உண்ணும் உணவின் ருசியையும், தன்மையையும் நாவிற்கும், மூளைக்கும் உணர்த்த ஏராளமான உணவுப் பொருட்களை நமது முன்னோர்கள் உண்ணும் உணவில் பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அருநெல்லி, பிரண்டை, எலுமிச்சை, நாரத்தை, துருஞ்சி போன்ற உணவுக்குப் பயன்படும் பல மூலிகைகள் சர்பத், ஊறுகாய் போன்ற பல வடிவங்களில் பக்குவப்படுத்தப்பட்டு உண்ணும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட்டு படுகின்றன. இவை நாவின் சுவை நரம்புகளை தூண்டி அரோசகத்தை நீக்குகின்றன. இந்த உணவுகளில் சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காயே நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

பிலன்தஸ்  டிஸ்டிகஸ்  என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது. அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.

                                                  அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு  நீக்கி  நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும். பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய  இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.
                                  நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

                                 டிபன்ஸ் மெக்கானிசம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது இரத்த அணுக்களால் தூக்கியயறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டுபண்ணுகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.

                           இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

                               மேலும் நாம் தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக்கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடைகின்றன. இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு உண்டாகும் கட்டிகள் பெரும்பாலும் தொடை, முதுகு, இடுப்பு, கால், கைகள் மற்றும் புட்டப் பகுதிகளில் உண்டாகுகின்றன.

                               சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடில்லாதவர்கள், உடல் உழைப்பில்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. லேசான வீக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறும். இது போன்ற தோல் மற்றும் சதை கட்டிகள் வளர்ந்து உடைவதற்கு பல நாட்களாவதுடன்  அந்த நாட்கள் வரை வலி, சுரம், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளையும் ஏற்படுத்துவதால் கட்டிகளை உடனே உடைத்து அவற்றை ஆற்றும் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்புண்டு.  

                                   இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்குநாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமின்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.

                               ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.

                                  முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்
                            நாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சளின் மகத்துவ குணங்கள் எம்மில் எத்தனை பேர் தெரிந்துவைத்திருக்கிறோம். இதோ இன்றைய மூலிகை பகுதியில் மஞ்சளை பற்றி சிறிது அலசுவோம்.

                             மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதில் மிக சிறப்பானது மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுவது. வயிற்றின் உள்ளே  உள்ள கிருமிகளை விரட்டுவதில் மஞ்சளுக்கு நிகர் மஞ்சள்தான்.

                              சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை, வேப்பங்  கொழுந்துடன் வாரா  வாரம் ஒரு முறை  அரைத்துக் கொடுத்தால், வயிற்றில் பூச்சிகள் இருக்காது. மேலும் சிறு குழந்தைகளுக்கு வரும் சளி, இருமலுக்கு பாலைக் கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு, சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல், மற்றும் சளி இருமலால் இரவில் தூங்காமல் அவதிப் படுவோரும் பாலில் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க வைத்து பருகினால்  இருமல் உடனே நின்றுவிடும்.

                          மஞ்சள் ஜீரணத்துக்கு உதவும் மருந்து கூட. நாம் அன்றாடம் செய்யும் சாம்பார், ரசம் இவைகளில் மஞ்சள் தூளை  சேர்த்து விட்டு, அதனுடன் கூடவே  பொரித்த  சிப்ஸ்,  வடை,  அப்பளம் என்றெல்லாம் காம்பினேசனில் சாப்பிட்டால் உணவு உடனே ஜீரணமாகிவிடும்.

                            நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி, அத்தனை நல்லதல்ல. ஆனால், அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து சாம்பார் பொடி தயாரிக்கும் போது, மிளகின் கெட்டத் தன்மையை  மஞ்சள் தூள் முறியடித்து விடும். மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது  புற்று நோய்கூட அண்டாது.

                            இந்தியாவில் பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்று நோய்  கொஞ்சம்  குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால்தான்.

                           விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலிபீனால்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், நோய் வராமல் தடுப்பதிலும் பெரும் பங்கு  அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள்.

                              மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவுத் தடுமாற்ற நோய், கீமோதெரபி தரும்போது  ஏற்படும் பக்க விளைவுகள் இவற்றை தடுக்கின்றது. சிறு வயது முதலே பெண் குழந்தைகள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து வந்தால், முகம்  பொன்னென மின்னும். முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது.

                                மஞ்சளில்  உள்ள குர்குமின் சத்து புற்றுநோய் அண்டவிடாமல் தடுக்கும். ஏற்கனவே இருந்தாலும்  அதன் வீரியத்தைக் குறைக்கும். உடலில் உள்ள உள் மற்றும் வெளிக் காயங்களை  ஆற்றும், வீக்கத்தைக் குறைக்கும்.

                              அசைவ சாப்பாட்டில் மஞ்சள் சேர்த்து சமைத்தால் விரைவில் ஜீரணமாகும். தவிர மஞ்சள் கிருமி நாசினி என்பதால் இறைச்சியில் ஏதும் கிருமிகள் இருந்தாலும்  அழித்து விடும்.

                            மஞ்சள் ஒரு தடுப்பு மருந்து, வாசனையூட்டி, ஒரு வலி நிவாரணி, ஒரு இணை மருந்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள், பயன் பெறுங்கள்!
                       “உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கொள்கையின் அடிப்படையே நமது இந்திய உணவுகள்தான்.

                         நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுண்கிருமியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பாரம்பரிய இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பல பதார்த்தங்கள் உணவுக்கு சுவையை தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளன. ஒரு உணவு பதார்த்தமானது உணவாக பயன்படுவது மட்டுமின்றி, மருந்தாகவும் பயன்பட்டால் அதைப் போல் சிறந்தது வேறு எதுவுமில்லை.

                       இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால் குழாய்கள் தடிமன் அடைகின்றன. இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதய தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இதய தசைகள் பாதிக்கின்றன. அதே போல் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைகிறது. இதனால் சோர்வும், நரம்புத்தளர்ச்சியும் உண்டாகிறது. உடம்பில் ஏற்படும் நுண்கிருமிகளின் தொற்று, வி­க்கடிகள் போன்றவற்றால் புரோஸ்டோகிளாண்டின் என்னும் பொருள் அதிகரித்து உணர்வு நரம்புகளை பாதிக்கின்றன. மேலும் உடலில் சேர்ந்த நுண்கிருமிகள் சிறுநீர்பாதை மற்றும் மலப்பாதையில் தங்கி மலம் கழிக்கும் போது வலியையும், சிறுநீர் செல்லும் போது எரிச்சலையும் உண்டாக்கின்றன. அது போல் இரத்தத்தில் அதிகரித்த யுரிக் அமிலம் எலும்பு இணைப்புகளை பாதிப்பதுடன் சிறுநீர்ப் பாதையில் யுரிக் அமிலக் கற்களையும் உற்பத்தி செய்கின்றன.

                             உடலின் அத்தியாவசிய செயல்பாடு மற்றும் மனநலனின் பாதுகாப்பிற்கு தேவையான துத்தநாகம், கந்தகம், செலினியம் போன்றவை உடலில் நுண்கிருமிகள் தாக்குவதை தடுப்பதுடன், உடலுக்கு ஊட்டச்சத்தையும் ஏற்படுத்தி மன இறுக்கத்தை போக்குகின்றன. சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவை சீரான முறையில் உற்பத்தியாகவும், தோலில் தங்கவும் அத்தியாவசிய புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு நமக்கு தேவைப்படுகிறது.

                       இவ்வாறு குறிப்படப்பட்ட பலவிதமான சத்துக்கள் இரத்தத்தில் குறைவதால் நமது அன்றாட  உடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், பலவிதமான நோய்களும் உண்டாகின்றன. ஆகவே நாம் உண்ணும் உணவில் மேற்கண்ட சத்துக்கள் தவறாமல் இடம்பெற வேண்டுமா?  கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவில் அன்றாடம் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டாலே போதுமானது. இந்திய உணவில் முக்கியப் பங்கை வகிப்பது வெங்காயமே. வெங்காயம் உணவின் ருசியை கூட்டுவதுடன், பலவிதமான சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆண் மற்றும் பெண்களுக்கான ஹார்மோன்களின் வளர்ச்சியை தூண்டுவதுடன், இனப்பெருக்க உறுப்புகளில் நுண்ணிய குழாய்களில் ஏற்படும் இரத்த தடையையும் நீக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வெங்காயம். சித்த மருத்துவத்தில் வளி, அழல், ஐயம் என்று சொல்லப்படும் மூன்று குற்றங்களையும் தணிக்கும் திரிதோட சமனிப் பொருளாக வெங்காயம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

                        ஆலியம் சீபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த வெங்காயத்தில் சிறிதாக காணப்படும் சற்று காரம் மிகுந்த சின்ன வெங்காயமே ஏராளமான மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. வெங்காயத்தில் ஏராளமான நீர்ச்சத்து அடங்கியுள்ளதாலும், குறைந்த அளவு கலோரிகளே சேமிக்கப்படுவதாலும் உடல் பருமனானவர்களும், சர்க்கரை நோயாளிகளும் வெங்காயம் மிகச் சிறந்த உணவாகும். 100கிராம் வெங்காயம் உட்கொள்ளும் பொழுது 51 கலோரிகள் மட்டுமே சத்து கிடைக்கின்றது. ஆகவே கலோரி சத்து அதிகம் நிறைந்த அசைவ உணவுகளுடன் வெங்காயமும், பூண்டும் சேர்க்கப்படுகிறது.

                       வெங்காயத்திலுள்ள சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, ஏ, பி, சி வைட்டமின்கள் இரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்குகின்றன. இவை உடலில் சேரும் பொழுது பைபிரினோலைசின் என்னும் பொருளை உற்பத்தி செய்து இரத்தக் கட்டிகளை கரைக்கின்றன. ஆகவே இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வெங்காயம். வெங்காயத்திலுள்ள அலினின் மற்றும் அலிசின் என்ற பொருள் செல்களுக்கு இன்சுலினின் தேவையை குறைக்கிறது. அது போல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறிய வெங்காயத்தை அடிக்கடி உட்கொள்ள அதிலுள்ள தையோசல்பனேட்டுகள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றன.

                        தேனீ மற்றும் வி­ வண்டுகள் கொட்டிய இடங்களில் சின்ன வெங்காயத்தை தடவ வி­ம் நீங்கும். ஆறாத புண்கள் ஆறவும், கட்டிகள் உடையவும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி, லேசாக வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரலாம். வெயில் காலங்களில் ஏற்படும் தோல் கருமை மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்க வெங்காயத்தை அடிக்கடி உணவில் உட்கொள்வதுடன் வெங்காயச் சாறை வெயில் படும் இடங்களில் தடவி வரவேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதாலும், விரைப்புத் தன்மையை அதிகப்படுத்துவதாலும் தாம்பத்ய குறைபாடுள்ள ஆண்கள் அடிக்கடி வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிலக்கின் போது குறைவான இரத்தப் போக்குள்ள பெண்கள் வெங்காயத்தை மைய அரைத்து சாப்பிட இரத்தம் நன்கு வெளியேறும்.

                        எனக்கு உடல் பருமன் உள்ளது. மலச்சிக்கலுக்காக வாழைப்பழம் சாப்பிடுகிறேன். இதனால் இன்னும் உடல் பருமானவது போல் உள்ளது. நான் வாழைப்பழம் சாப்பிடலாமா? வாழைப்பழ தோலில் மட்டுமே நார்சத்து உள்ளது. உள்ளே உள்ள பழத்தில் நார்சத்து இல்லை. மேலும் வாழைப்பழத்தின் உள்ளே உள்ள மாவுப்பொருள் உடல் பருமனை கூட்டலாம். ஆகவே வாழைப்பழத்தை உட்கொள்ளும் பொழுது மேற்தோலின் உட்புறமுள்ள நார்சத்து நிறைந்த, சற்று மென்மையும், கடினமும் கலந்த பகுதியை உரித்து சாப்பிட மலச்சிக்கலும் நீங்கும். உடல் பருமனும் கூடாது. மேலும் தோலின் உட்புறம் உடலின் ஆயுளை நீட்டிக்கும். செரடோனின் என்னும் பொருள் நிறைந்துள்ளது.
 
                        இரத்தச்சோகை இப்பொழுது பெரும்பாலானோரை பாதித்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் இரத்தச்சோகையால் அவதிப்படுகின்றனர். 12 வயதை நெருங்கும் பெரும்பாலான பெண்களுக்கு இரத்தச்சோகை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கம்பு, கேழ்வரகு, சோளம், வெந்தயம், பாதாம், முந்திரி, பிஸ்தா, பட்டாணி, உளுந்து, சுண்டைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், பீட்ரூட், முட்டைகோஸ், அனைத்து கீரைகள், பேரீட்சை, மாதுளை, ஆப்பிள், நெல்லிக்காய் போன்ற பழங்களிலும், மீன், ஆட்டு இறைச்சி, ஈரல், மூளை போன்ற அசைவ உணவுகளிலும் இரும்புச் சத்தை அதிகப்படுத்தும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே இவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் இரத்தச் சோகையை தவிர்க்கலாம்.
                                  முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி.

                                அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. பிறந்தது முதல் அங்குமிங்கும் பலவாறு சுழன்று அசைந்துக் கொண்டிருக்கும் மூட்டுகளுக்கு போதிய பயிற்சி தராவிட்டாலும் பரவாயில்லை... உடல் எடை கூடாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டும். சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.

                                  நமது உடலிலுள்ள ஒவ்வொரு எலும்புகளும் ஒவ்வொரு விதமாக அசைந்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு அசையும் எலும்புகளானது இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் மேலும், கீழும், முன்னும், பின்னும், அங்குமிங்கும் என சதா அசைந்து கொண்டும், சுற்றிக் கொண்டுமிருக்கும் நம்முடைய கழுத்து, தோள், இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் மற்றும் விரல் மூட்டுகளை வாழ்நாள் முழுவதும் சீராக இயங்க வைக்கின்றன. ஆனால் உடல் எடை மற்றும் வயது அதிகரிக்கும் பொழுது எலும்பு, எலும்பை பிடித்திருக்கும் தசைநார் மற்றும் பந்தங்கள் பலகீனமடைவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி உயவுத்தன்மையை இழந்து, தங்கள் செயல்பாட்டையும் இழக்கின்றன. இந்நிலையில் எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும். இல்லாவிடில் எலும்பு சந்திகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், இறுக்கம், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன.

                         போதிய நடைப்பயிற்சியின்மை, அதிகரித்த உடல் பருமன், கொழுப்புச்சத்து, ஒரே இடத்தில் தொடர்ந்து நின்றுக்கொண்டிருத்தல், வைட்டமின்கள் நிறைந்த கீரை, காய்கறிகளை தவிர்த்தல், இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு, மூட்டு இணைப்புகளில் கிருமித்தொற்று, பிற மருந்துகளின் ஒவ்வாமை, முதுமை, பரம்பரை போன்ற பல காரணங்களால் ஆர்த்ரைட்டிஸ் உண்டாகிறது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் முதிய வயதினரே கீல்வாயுவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                 மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைவுகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. சமவெளிப்பகுதிகளில் வசிப்பவர்களை விட மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மூட்டுவலிக்கு அதிகம் ஆளாகின்றனர். மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.

                               Smilax zeylanica என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும். தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம். இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றடமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களில் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்.
                                 வெள்ளைப்பூண்டில் மரபுரீதியாகவே நிறையதாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்பொருட்கள் உள்ளன. தயோ சல்பினேட் எனும் உயிர்ப் பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர்  மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.

                             சமையல் அறையில் பயன்படுத்தும் முக்கியமான மூலிகைப் பொருட்களில் ஒன்று வெள்ளைப் பூண்டு. இதய வியாதி மற்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்பு  ஆற்றல்தர வல்லது.  பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப்  பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம்.

கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ஆலிசின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது.  ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆலிசின் உதவுவதாக தெரிய வந்துள்ளது.  ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக்கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது.

இச்செயலால் கரோனரி தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது  தடுக்கப்படுகிறது. இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாக்டீரியா, வைரஸ்  மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்று நுண்கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய்எதிர்ப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது.

ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்பொருளாகும். பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய  தாது உப்புக்கள் உள்ளன. செலீனியம் இதயத்திற்கு ஆரோக்கியம் வழங்கும் தாதுவாகும். நோய் எதிர் நொதிகள் செயல்படசிறந்த துணைக்  காரணியாகவும் இது செயல்படும். மாங்கனீசு, நொதிகளின் துணைக் காரணியாகவும், சிவப்பு ரத்தஅனுக்கள் உற்பத்தியில் இரும்புத் தாது  பங்குபெறுகிறது.

பீட்டா கரோட்டின், ஸி-சான்தின் போன்ற நோய் எதிர்ப்பொருட்களும், வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும் உள்ளன. வைட்டமின்-சி, நோய்த்  தொற்றை தடுக்கும், தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை விரட்டியடிக்கும் தன்மையும் கொண்டது.
                  இஞ்சி மஞ்சள் இனம், இஞ்சி காய்ந்தால் சுக்கு என்பர். கொல்லிமலை இஞ்சி காரமும், மணமும் நிறைந்தது.

                கொல்லிமலையில் மண்ணின் வளத்துக்கு ஏற்ப அதிகமாக விளைகிறது. மலையில் இயற்கையாக விளைந்தாலும் பணப் பயிராகவே பார்க்கப் படுகிறது.

                இஞ்சியின் குணங்கள்: இஞ்சி காரக்குணம், நல்ல வாசனையும் கொண்டது. உடல் நலன் காக்கும் சிறந்த மருந்தான இஞ்சி, பசியைத் தூண்டிவிடும். உணவை செரிக்க வைக்கும் சுரப்பிகளை சுரக்க வைக்கும், மூட்டுக்களுக்கு வலு சேர்க்கும் தலை சுற்று மயக்கம் போக்கும், உடல்வலி, சளி இருமலைப் போக்கும்.

                   திரிகடுக சூரணத்தில் இஞ்சி சேர்க்கப் படுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா செரியாமை சுவையின்மை ஆகியவற்றை குணமாக்கும் உணவு செரிக்கும் இரைப்பை, சிறு குடல், பெருகுடல் ஆகியவற்றை செயல் பட வைக்கும்.

                      சாப்பிடும் முறை: தோல் எடுத்த இஞ்சியைப் பொடிபொடியாக நறுக்கி தேனில் ஊறவைக்கவும் தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். பசி எடுக்கும் உணவு செரிக்கும். தலை சுற்றல், மயக்கம் தீரும் நாம் வழக்கமாக சாப்பிடும் பழச்சாறுகளில் இஞ்சியை நசுக்கிப் போட்டு வடிகட்டி பருகினால் நல்ல மனமும், சுவையும் கிடைக்கும். மோரில் இஞ்சி தட்டிப்போட்டு உப்புப் போட்டு பருகினால் மேலும் பல உடல் நலன்கள் ஏற்படும். இப்படி இஞ்சியை  உணவில் சேர்த்துக் கொள்வதால் மேற் சொன்ன பல வியாதிகள் தீரும்.

                    இப்படி சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால், நாம் அன்றாடம் செய்யும் தேங்காய் சட்னி தக்காளிக் குருமா கொத்து மல்லிப் புதினாத் துவையல் இவைகளில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஊறுகாய் போட்டு வைத்துக் கொண்டு சாப்பிடலாம். மஞ்சள் போலவே இருக்கும் மா இஞ்சி மாங்காய் வாசனையோடும் ருசியோடும் இருக்கும். இதையும் சமையலுக்கு பயன்படுத்தலாம், இதிலும் மருத்துவ குணங்கள் உண்டு.
                       உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றல் எதில் இருக்கிறது ?

                        உணவே மருந்தாக இருக்கவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். பெரும்பாலான சித்த மருந்துகள் உணவின் வடிவத்திலே காணப்படுகின்றன. சூரணம், லேகியம், மணப்பாகு என பல வடிவங்களில் வழங்கப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்து உடையவையாகவும், பலவித சத்துக்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்குவதுடன் பலவித நோய்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவேதான் இந்திய உணவு வகைகள் பல மக்களின் உடல்வாகுக்கும், சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு காணப்படுகிறது.

                         உடனடி சக்தியை தரக்கூடிய அரிசி உணவை தென்னிந்தியர்கள் அதிகம் உண்பதும், தாமத சக்தியை தரக்கூடிய கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை வட இந்தியர்கள் அதிகம் உட்கொள்வதும் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். உடலின் தன்மைக்காக மட்டுமின்றி, சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு நாம் உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.

                          வெறும் அரிசியை மட்டுமே உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை நோயால் பாதிப்பு உண்டாகும் பொழுது பிற உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும், ருசி பிடிக்காமலும் மறுபடியும் அரிசி உணவுகளையே உட்கொண்டு தங்கள் சர்க்கரைநோயை கட்டுப்படுத்த இயலாமல் திணறுகின்றனர். அது போல் வட இந்தியர்கள் கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை உட்கொள்வதால் உடனடி சக்தி கிடைக்காமல் உடல் உழைப்பு சற்று குறைந்து காணப்படுகின்றனர். ஆகவே ஒவ்வொருவரும் பலதரப்பட்ட சத்துக்களையும் உள்ளடக்கிய கலப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

                          அரிசியை விட ஊட்டச்சத்து அதிகம் மிகுந்த கோதுமை போன்ற பல தானியங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றையும் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்வதால் உடலில் சத்துக்குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி இதர சத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய தானியங்களில் முக்கியப் பங்கை வகிப்பது ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு ஆகும்.

                         சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு கருதப்படுகிறது. அரிசியைப் போன்றே சர்க்கரையளவு இதில் காணப்பட்டாலும் சீரண மண்டலத்தில் சர்க்கரையை கொஞ்சங் கொஞ்சமாக வெளியிடுவதால் சர்க்கரை நோயாளிகளும் உட்கொள்ளும் சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

                        எலுசின் கோரக்கேனா என்ற தாவரவியல் பெயர் கொண்ட போயேசியே குடும்பத்தைச் சார்ந்த புல்லைப் போல் வளரும் கேழ்வரகு தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவு பயிர் செய்யப்படுகிறது. கருஞ்சிவப்பு நிற ராகியை விட வெள்ளை ராகியே தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ராகியில் பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.

                         கேழ்வரகை களியாக கிண்டியோ, புட்டு போல் வேகவைத்தோ, அடை அல்லது ரொட்யாக சுட்டோ , கூழ் போல் செய்து குடித்தோ பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். கால்கிலோ கருப்பட்டியை 300மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அரைகிலோ ராகிமாவு, கால் தேக்கரண்டி உப்பு மற்றும் நான்கு மேசைக்கரண்டி தேங்காய்த்துருவலுடன், இந்த கருப்பட்டி நீரை கலந்து கெட்டியாக பிசையவும். இதனை நல்லெண்ணெய் ஊற்றி ரொட்டியாக சுட்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் ராகியை புட்டாக செய்து சாப்பிடலாம்.

                               அரைகிலோ ராகி மாவை தண்ணீர் மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து உதிரியாக கிளறி 10 நிமிடங்கள் இட்லி போல் ஆவியில் வேகவைத்து அத்துடன் பொடித்த ஏலக்காய்த்தூள், தேவையயனில் தேங்காய் துருவல் மற்றும் நெய் கொஞ்சம் சேர்த்து கிளறி வைத்துக்கொள்ள வேண்டும். இது இரத்த சர்க்கரையளவு அதிகப்படாமல் கட்டுப்படுத்துவதுடன், பசியையும் மட்டுப்படுத்தும்.

                       கேழ்வரகு கொழுப்பு அமிலங்களை மாற்றுவதில் தீவீரமாக செயல்படுவதால் சிலருக்கு தோல் வறட்சியும், அரிப்பையும் உண்டாக்கலாம். அது போன்றவர்கள் உணவில் கேழ்வரகை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
                         இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும்,

                       நோய்வாய் படும்பொழுதும் புத்துணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. இளமைக்காலத்தில் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்த உடலானது முதுமையை நெருங்கும் பொழுது செல்களின் பல்முறை பெருக்கம் குறைந்து, செல் அழிவை சந்திக்க நேரிடுகிறது.

                        இதனால் தோல் சுருங்குதல், சதை வற்றுதல், ஐம்பொறிகளின் பலன் குன்றுதல், முதுமைகால நோய்களின் ஆதிக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பல வகையான நோய்களால் உடல் பாதிக்கப்படும் பொழுது செல்களின் ஆற்றல் குறைந்து ஒருவித பலஹீனம் ஏற்படுகிறது. இந்த பலஹீனத்தினாலும் புத்துணர்ச்சி மறைந்து ஒருவிதமான சோர்வு நம்மை ஆட்கொள்கிறது.

                            உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங்கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும் பொழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உலகிற்கு சவாலாகவும், பலவித ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

                            நமது உடலின் உறுப்புகள் செயலிழந்தால் அவற்றை மாற்றி பிறரின் உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவது போல் நாளமில்லா சுரப்பிகளை மாற்றம் செய்யும்படியான மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி இன்னும் ஏற்படவில்லை என்பதே உண்மை. ஹார்மோன்களின் செயல்பாடானது செல் வளர்ச்சியை சீராக்கவும், செல் முதிர்ச்சியை கட்டுப்படுத்தவும், செல் அழிவை தடுக்கவும் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இனப்பெருக்க உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் ஒரு மனிதனை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

                         ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க ஹார்மோன்கள் முதுமையை கட்டுப்படுத்துகின்றன. டெஸ்டோஸ்டீரோன்கள் குறைபாட்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், அலித்தன்மையும், தோல் சுருக்கம், தோல் வறட்சி மற்றும் ஒருவித பலஹீனமும் உண்டாகின்றது. அதே போல் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் பெண்களுக்கு விரைவில் மெனோபாஸ் ஏற்படுகிறது. ஆண்களுக்கு வளர்வது போன்ற ரோமங்களும், சதை தொங்குதல், முடி உதிர்தல் போன்ற முதுமையின் குணங்களும் தோன்றுகின்றன. இந்த ஹார்மோன்களை சுரக்கக்கூடிய இனப்பெருக்கம் சார்ந்த நாளமில்லா சுரப்பிகளும், இவற்றை கட்டுப்படுத்தும் பிட்டுயூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பியும் தங்கள் பணியில் தொய்வடைவதால் விரைவில் முதுமை ஏற்படுவதுடன் பாலுறவில் ஆர்வக்குறைவும் தோன்றுகிறது.

                       தாம்பத்ய உறவில் மிதமாக ஈடுபடுபவர்களுக்கு இதயக்கோளாறு, இரத்தக்கொதிப்பு மற்றும் அதிக இரத்த உறைவு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக சமூக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாலுறவில் ஈடுபட வாய்ப்பில்லாத மற்றும் பாலுறவு துணை இல்லாத ஆண்களும், பெண்களும் விரைவில் மனநோய்க்கு ஆளாகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

                       ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா. பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.

                          பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன. பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன. பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும். பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.

                       மணம் மற்றும் நறுசுவை நிறைந்த பிஸ்தா பருப்பானது ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்றவற்றில் பெருமளவு சேர்க்கப்படுகிறது.
                        வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

                           கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

                            வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

                           வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

                          இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

                          முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

                       காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

                      தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

                        செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

                           நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

                            முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

                       முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

                             காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

                              சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

                            புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
                        அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

                    கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்­ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

                    தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.
                         காலை மற்றும் இரவு நேர உணவுகளை விட அறுசுவையுடன் விருந்து போல வயிறு முட்ட ரசித்து, ருசித்து சாப்பிடும் உணவு மதிய உணவுதான்.

                        ஆகவேதான் கல்யாணம், விழா போன்ற கொண்டாட்டங்களில் மதிய உணவான சாப்பாட்டை வயிறு முட்ட ருசிப்பதற்கு ஒரு கூட்டமே பந்திக்காக காத்திருப்பதுண்டு. ஆகவே மதிய சாப்பாட்டில் காய்கறிகளையும், கீரைகளையும் கொண்டு பலவிதமான கூட்டு, பொரியல், பச்சடி என நாக்கில் எச்சில் ஊறவைக்கும் உபஉணவுகளும் பரிமாறப் படுவதுண்டு.

                        ஒவ்வொரு நாள் உணவிலும் ஏதேனும் ஒரு கீரையை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோல் கீரையை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ஆண்மை அதிகரிப்பதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. பெரும்பாலான கீரைகள் மிகவும் குளிர்ச்சித்தன்மை உடையதுடன் மலத்தையும் இலக்கும் தன்மையை கொண்டுள்ளன. இதனால் சிலருக்கு சளித்தொல்லை, தொண்டைக்கட்டு போன்றவை எப்பொழுதாவது ஏற்படலாம். இந்த தொல்லைகளுக்காக பயந்து சிலர் கீரையை உட்கொள்வதில்லை. அதுபோன்றவர்கள் கீரையுடன் பருப்பு, மிளகு, சீரகம், மஞ்சள், வெங்காயம் போன்றவற்றை சரியான முறையில் சேர்த்துக்கொண்டால் இந்த தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

                         தொடர்ந்து ஒரே கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு கீரையில் உள்ள உப்புகள் இரத்தத்தில் அதிகமாக கலந்து கற்களை உண்டாக்கலாம். அது போன்றவர்கள் மூடிய பாத்திரத்தில் கீரையை நன்கு வேகவைத்து, நீரை வடிகட்டி இலைகளை மட்டும் சமைத்து உபயோகப்படுத்தலாம். இதனால் உப்பை தவிர பிற சத்துகள் வீணாகாமல் உடலில் சேருகின்றன. அது போல் கீரையிலுள்ள இரும்பு, பாஸ்பரஸ், சுண்ணாம்பு, சிலிகா, துத்தநாகம் மற்றும் செலினிய சத்துகள் செல் அழிதல் மற்றும் முதிர்தலை கட்டுப்படுத்தி ஆயுளை நீட்டிக்கின்றன. பெரும்பாலான கீரைகள் போகத்தை அதிகப்படுத்துவதுடன், நாடி நரம்புகளுக்கு வலுவையும் உண்டாக்குகின்றன.

                       பலவிதமான கீரைகளை நாம் அடிக்கடி உட்கொண்டாலும், சில கீரைகளே அனைவரும் உட்கொள்வதற்கு ஏற்றதாகவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் காணப்படுகின்றன. அது போன்ற கீரைகளில் தனித்தன்மை வாய்ந்தது பசலைக்கீரை. தரைப்பசலை, கொடி பசலை என இரண்டு வகைகளாக காணப்படும் பசலைக் கொடிகளில் சிவப்பு நிறத்தண்டுகளையும், சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த இலைகளையுடைய கொடி பசலையே உணவுடன் கூட்டாக செய்து சாப்பிட பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்பு, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ள பசலைக்கீரையை வாரம் இரண்டு முறையாவது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட நரம்புத்தளர்ச்சி நீங்குவதுடன், உடல் உஷ்ணம் தணியும்.

                     போர்டுலேகா ஸ்பீசஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட  போர்டுலேசியே குடும்பத்தைச் சார்ந்த பசலைக்கொடிகள் நட்டு வைத்தால் கூட முளைத்து, கொடியாக படரும் தன்மையை உடையவை. உணவுடன் கடையலாகவும், கூட்டாகவும், குழம்பாகவும் பல விதங்களில் பசலைக்கீரை பாகப்படுத்தப்பட்டு உட்கொள்ளப்படுகிறது.

 இதோ பசலைக்கீரை கூட்டு செய்யும் முறை:
                                 பசலைக் கீரையை நன்கு அலசி காம்பு, நடுநரம்பு நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 100கிராம் பாசிப்பருப்பை மைய வேகவைத்து அதில் வதக்கிய வெங்காயம் 100கிராம், கடுகு‡அரைத்தேக்கரண்டி, உழுந்தம்பருப்பு - அரைதேக்கரண்டியை நல்லெண்ணெயில் தாளித்து, வெந்த பாசிப்பருப்பில் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். அதன்பின் அரைமூடி தேங்காயை அரைத்தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு அரைத்து அத்துடன் மஞ்சள்தூள்‡1தேக்கரண்டி, மிளகாய்த்தூள்‡அரை தேக்கரண்டி மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து பாசிப்பருப்புடன் கலந்து 10 நிமிடங்கள் நன்கு வேகவைத்து கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

                       சுவையான நீர்ச்சத்து மிகுந்த பசலைக்கீரை கூட்டை மதிய உணவுடன் அடிக்கடி உட்கொள்ள உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் மற்றும் அக்கி, அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
                         ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. ஆனால் அவற்றை பின்பற்றுவதுதான் சற்று கடினம்.

                         நாம் உண்ணும் உணவானது உடல் வளர்ச்சிக்கு உதவினாலும் அதிலுள்ள சிலப் பொருட்கள் வயிற்று உபாதையை ஏற்படுத்திவிடுகின்றன. நம் உணவிலுள்ள சிலப் பொருட்கள் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு சுவையாகவும் இருப்பதில்லை. இவ்வாறு உணவில் பலப் பிரச்சனைகள் உள்ளதால் நாம் சமைத்த உணவை விரும்பி சாப்பிடுவதை விட இயற்கையாக கிடைக்கும் பழம், கிழங்கு போன்றவற்றை சாப்பிடுவதைதான் அதிகம் விரும்புகிறோம். அவ்வாறு உட்கொள்ளும் சிலப் பழங்களும் நமக்கு எப்பொழுதும் ருசியாக இருப்பதில்லை. அதிகமாக உட்கொண்டால் திகட்டக்கூடிய பழங்கள் அல்லது புளிக்கக்கூடிய பழங்கள்தான் உண்டு. ஆகவே சில நேரங்களில் தொடர்ந்து பழங்களை சாப்பிடுவதும் கூட சலிப்பு தட்ட ஆரம்பித்துவிடும்.

                        நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்களையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.   இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், இரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுவது நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

                            பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

                           மது அருந்துபவர்களுக்கு இரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துகள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர விஸ்கி அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு இரத்தத்தைச் சுத்தம் செய்து இரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

                              ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி குடற்பாதையிலுள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வாய் மற்றும் தொண்டைப்பகுதிகளிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு ஆப்பிள் மேற்தோலானது செரிக்கக் கடினமாக இருக்குமென்பதால் மேற்தோலை நீக்கி உட்கொள்வது நல்லது.

                               ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பது ஆங்கில பழமொழி. நீர்ச்சத்து ஏராளமாக உள்ள ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் நன்கு உட்கொள்ளலாம். இதில் ஏராளமான மாவுச்சத்து நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சமஉணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகள் ஆப்பிளை எடுத்துக்கொள்ளலாம்.

                          எனக்கு உடல் எடை அதிகமாக உள்ளது. காலும் வீங்கியிருக்கிறது. கால் வீக்கம் வற்ற வீட்டு வைத்தியம் ஏதேனும் சொல்லவும்.

                        பப்பாளி பழத்தை தோல் நீக்கி சாறை மட்டும் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி நன்கு வெயில் படும்படி வைத்து மெழுகு பதம் வந்ததும் பட்டாணியளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். காலை‡1, இரவு‡1 சீரக கசாயத்தில் சாப்பிட கால் வீக்கம் வற்றி உடல் எடை குறையும்.

                          முற்றிய கடலைச் செடியின் மேல் மெல்லிய துணியை இரவில் போட்டுவிட வேண்டும். அதிகாலையில் அந்த துணியைப் பிழிய அதிலிருந்து ஒரு திரவம் வடியும். இந்த திரவத்திற்கு கடலைப்புளிப்பு அல்லது கடலை காடி என்று பெயர். அதிக சீதள தன்மையுடைய இந்த கடலைக் காடியை ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நான்கு பங்கு நீருடன் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நீரெரிச்சல், நீர்க்கடுப்பு, வயிற்று உப்புசம் ஆகியன நீங்கும். நன்கு பசியயடுக்கும். இத்துடன் சீனி சேர்த்து காய்ச்சி சர்பத் போல் செய்து கொள்ளலாம். உணவுக்குப் பின் இதனை சாப்பிட வயிற்றுத்தொல்லை நீங்குவதுடன் நன்கு செரிமானம் ஏற்படும். கோடைக்காலத்தில் இளநீர், பதனீர் உட்கொள்வது போல எளிய செலவில்லாத கடலைக் காடியையும் உட்கொள்ளலாம்.
                       வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

                       குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

                      வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

                           உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

                             வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

                         வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

                        குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

                         வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

                   உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

                               வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடு‌ங்க‌ள். அது ந‌ல்ல பலனை‌த் தரு‌ம்.

இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சனை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
                                    உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ....

கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
நல்லெண்ணை - 600 கிராம்
பசுவின் பால் - 200 மில்லி

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.  இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
பூவரசன் வேர் - 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் - 25 கிராம்
சிறுநாகப் பூ - 15 கிராம்
வெடியுப்பு - 10 கிராம்
புனுகு - 10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.
                 அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள்,  தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை  அவசியம் சாப்பிட வேண்டும்.

                  எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.  அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது.  குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.

                    பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள்  பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ்.  வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

                  சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு  விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும்  புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

                    பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு  சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும்  பங்கெடுக்கிறது.

                      பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

                     கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.