கன்னம் மொழுமொழுவென்று இருக்க

/
2 Comments
                        அழகான கன்னமாக இருந்தாலும் சிலருக்கு எண்ணெய்ச் சருமமாக இருந்தால் பருக்கள் வரலாம். கன்னங்கள் ஒட்டி இருப்பதும் புஷ்டியாய் இருப்பதும் அவரவர் தாடை எலும்பு, முக அமைப்பு, பரம்பரை வாகைப் பொறுத்தது.  கன்னத்துக்கு ஈரப்பதத்தைத் தருவது, மசாஜ் செய்வது, சத்தான ஊட்டச்சத்து உணவை உட்கொள்வது போன்றவற்றின் மூலம் கன்னத்தில் பளபளப்பைக் கூட்டி மெருகூட்டலாம்.
உப்பலான கன்னத்திற்கு...
                      தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னத்தில் தேய்க்க வேண்டும். ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை பூசி, தினமும் கீழிருந்து மேலாக 'ஃபேஷியல் ஸ்ட்ரோக்’ கொடுத்துவந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும்.

                    அரைத்த பப்பாளி விழுது மற்றும் தேன் ஆகியவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.  தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தைப் பளபளப்பாக்கும்.
உணவு

                    தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா, சாரை பருப்பு, முந்திரிப்பருப்பு இவற்றைத்                    தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிடலாம். தோலில் எண்ணெய்ப் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், கன்னம் சதைப் பற்றுடன் மின்னும்.

                  ஆப்பிள், கேரட் துண்டுகளைத் துருவி ஜூஸ் எடுத்து, எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் காலை குடித்துவந்தால், கன்னத்தில் சதை போடுவதுடன் நிறம், பளபளப்பு கூடும்.

                  ஓட்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன், பால் ஒரு கப், வெண்ணெய், தேன் தலா ஒரு டீஸ்பூன், 2 துண்டு சீஸ் இவற்றைக் கலந்து தினமும் காலை சாப்பிட வேண்டும். கூடவே, ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் ஒட்டிய கன்னம் ஆப்பிள்போல மாறும்


கன்னம் குண்டாக வேண்டுமா ?
                           உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை பட வேண்டாம் கன்னம் ஒட்டியிருப்பது ஒரு பெரிய குறையே அல்ல .

                         தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொண்டால் மிக எளிதாக மிக அழகான கன்னங்களை பெறலாம்|.

                   பெரும்பாலும் உணவில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு சத்து உள்ள பொருட்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.

                  பால், மீன், இறைச்சி, முட்டை, வெண்ணெய்,வேர்க்கடலை, நெய், வாழைப்பழம், சுண்டல் போன்றவற்றை உணவோடு அடிக்கடி சேர்த்து-கொள்வது மிகவும் நன்று .

"கீரைகள், பருப்பு" போன்றவற்றை அதிகம் சோ்த்துகொள்ள வேண்டும்.

மேலும் தேவையில்லாமல் கவலைப்படமல் தினமும் எட்டுமணி நேரம் தூங்க வேண்டும்.

இப்படி சரியாக செய்துவந்தால் ஒட்டிய உங்களது கன்னம் குண்டாக மாறிவிடும்.
கன்னம் குண்டாக, வேண்டுமா , அழகாக இருக்க வேண்டுமா, கன்னம் உப்ப, கன்னம் சிவக்க, வைத்து, அலகாக இருக்க வேண்டும்,


You may also like

2 comments: